பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் பாக்.,கில் 28 பேர் உயிரிழப்பு
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் பாக்.,கில் 28 பேர் உயிரிழப்பு
ADDED : மே 30, 2024 12:39 AM
கராச்சி, பாகிஸ்தானில், அதிவேகமாக சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெய்ட்டாவில் இருந்து துர்பாட் நகருக்கு பயணியரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாசுக் நகர் அருகே நேற்று அதிவேகமாக சென்றபோது, திடீரென டயர் வெடித்து பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஸ்சில் சிக்கித் தவித்த 22 பேர் காயத்துடன் மீட்டனர்.
கடந்த 18ல் குஷாப் மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் மே 3ல், கிலஜித் பலுசிஸ்தான் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.