ஹமாசுக்கு இஸ்ரேல் பதிலடி குண்டு வீச்சில் 40 பேர் பலி
ஹமாசுக்கு இஸ்ரேல் பதிலடி குண்டு வீச்சில் 40 பேர் பலி
ADDED : மே 28, 2024 02:22 AM

டெல்அவிவ், பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் நடந்து வருகிறது.
கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேல் மீது பெரியளவில் எந்தவித ஏவுகணை தாக்குதலும் நடத்தாமல் இருந்த ஹமாஸ் ஆயுதப் படையினர், நேற்று முன்தினம் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெற்கு காசாவில் உள்ள ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழைகளை பொழிந்தது.
போரால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் அதிகளவில் தங்கியிருந்த முகாம் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதற்காக தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இரண்டு நாட்களில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறிஉள்ளது.