ADDED : ஆக 08, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு, நேபாளத்தில், சுற்றுலா பயணியர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதிய விபத்தில், பைலட் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து நேற்று பிற்பகலில் ஹெலிகாப்டர் ஒன்று பைலட் உட்பட ஐந்து பேருடன் ரசுவா நகர் நோக்கி புறப்பட்டது.
புறப்பட்ட மூன்று நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து, வடகிழக்கு காத்மாண்டு பகுதியில் உள்ள மலையில் மோதியது.
இதில் பைலட் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்களது சடலங்கள் சிவபுரி மாநகராட்சி பகுதியில் மீட்கப்பட்டன. சாலையில் கிடந்த இரு ஆண்கள், ஒரு பெண், பைலட் மற்றும் உடல் கருகிய நிலையில் கிடந்த உடல் உட்பட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன.
இறந்தவர்களில் நான்கு பேர் சீன நாட்டு சுற்றுலா பயணியர் என தெரிய வந்துள்ளது.