தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
UPDATED : அக் 20, 2024 12:21 PM
ADDED : அக் 20, 2024 08:26 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் மக்களை தாக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தே தீருவோம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நேற்று 'ட்ரோன்' தாக்குதல் நடத்தினர். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து, வெளியிட்டுள்ள வீடியோவில் நெதன்யாகு கூறியதாவது:
எங்கள் வீரர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எங்கள் தளபதிகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், இஸ்ரேலின் குடிமக்களை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன்.
பெரிய தவறு
எங்கள் குழந்தைகளை உயிருடன் எரித்த பயங்கரவாத தலைவன் கதையை முடித்து விட்டோம். ஈரானின் மற்ற பயங்கரவாத பினாமிகளுடன் எங்கள் போரைத் தொடர்கிறோம். என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி, எந்த விதத்திலும் எங்கள் பணியை தடுக்காது.
வெற்றி
எங்கள் குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்போருக்கு இஸ்ரேல் அரசு பதிலடி கொடுக்க நேரிடும். தங்கள் செயல்களுக்காக அவர்கள் மிகக்கடினமான விலையை கொடுக்க நேரிடும். உங்கள் பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து ஒழிப்போம். காசாவில் இருந்து எங்கள் பிணை கைதிகளை மீட்போம். நாங்கள் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடைவோம். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் நடந்து வரும் போரில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.