ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வங்கதேச அரசு தடை
ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வங்கதேச அரசு தடை
UPDATED : அக் 24, 2024 08:19 AM
ADDED : அக் 24, 2024 08:12 AM

டாக்கா: ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசை அகற்ற வழிவகுத்த, மாணவர் அமைப்பை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்துள்ளது.
வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலையில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், ராணுவம் கொடுத்த 45 நிமிட கெடுவில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஷேக் ஹசீனா இந்தியா வந்திறங்கினார். தற்போது ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசை அகற்ற வழிவகுத்த, மாணவர் அமைப்பை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்துள்ளது.
இது குறித்து வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விதிகளின் படி உடனடியாக அமலுக்கு வரும் வகையில், வன்முறையில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்த அமைப்பு, கொலைகள், துன்புறுத்தல்கள் மற்றும் பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.