கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ
கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ
ADDED : மே 05, 2024 03:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டவா: 'கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது' என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில், 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: இது முக்கியமான விஷயம். கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது. கனடா சட்டப்பூர்வமான நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு.
நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பின், சீக்கிய மக்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். கனடாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதுகின்றனர். கனடா நாட்டை சேர்ந்த ஒவ்வொருவரும் பாகுபாடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.