ADDED : ஜூன் 11, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீய்ஜிங்: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் லீ கியாங்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன பிரதமர் லீ கியாங்க் அளித்த பேட்டியை சீனாவிலிருந்து வெளிவரும் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் வெளியிட்டிருப்பதாவது,
இந்திய தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு பெற்ற பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியா-சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம். நட்புறவு ஆகியவற்றை சரியான திசையில் முன்னேற்ற இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.