மியான்மரில் புயல்: 113 பேர் பலி; 3 லட்சம் பேர் வீடுகள் இழந்தனர்
மியான்மரில் புயல்: 113 பேர் பலி; 3 லட்சம் பேர் வீடுகள் இழந்தனர்
UPDATED : செப் 16, 2024 03:01 PM
ADDED : செப் 16, 2024 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகோ: ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் தற்போது புயல் மழை வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்த முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மியான்மர், வியட்னாம், தாய்லாந்து பகுதிகளில் வீசிய புயலில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியான்மரில் பல பாலங்கள் இடிந்தன. இங்கு மின்சாரம், இன்டர்நெட் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 113 பேர் பலியாகினர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

