கனடா, மெக்சிகோ மீதான கூடுதல் வரி ஏப்.,2 வரை நிறுத்திவைப்பு: ஜகா வாங்கினார் அதிபர் டிரம்ப்
கனடா, மெக்சிகோ மீதான கூடுதல் வரி ஏப்.,2 வரை நிறுத்திவைப்பு: ஜகா வாங்கினார் அதிபர் டிரம்ப்
ADDED : மார் 07, 2025 07:40 AM

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ மீதான 25% வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை டிரம்ப் நிறுத்தி வைத்தார். அமெரிக்கப் பொருட்கள் மீதான பதிலடி வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை கனடா ஒத்திவைக்கிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.அதன்படி, தன் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது, பரஸ்பரம் அதே அளவு வரியை விதிக்கப் போவதாக கூறினார்.
சீனாவின் பொருட்களுக்கு, 10 சதவீதம் வரி விதித்து கடந்த மாதம் டிரம்ப் உத்தரவிட்டார். அதே நேரத்தில், மெக்சிகோ மற்றும் கனடா மீதான நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்தார். இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவை, டிரம்ப் மார்ச் 4ம் தேதி பிறப்பித்தார்.
இந்நிலையில், கனடா, மெக்சிகோ மீதான 25% வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதை அடுத்து அமெரிக்கப் பொருட்கள் மீதான பதிலடி வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை கனடா ஒத்தி வைத்துள்ளது.
கனடாவின் தலைவர் பதவியில் இருந்து விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்ப் தொடங்கி வைத்துள்ள வர்த்தகப் போர் விரைவில் குறையும் என்று தான் எதிர்பார்க்கவில்லை.
எதிர்காலத்தில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட வர்த்தகப் போரில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும், என்றார்.