இலவசம்-னு அறிவிச்சாலே இப்படித்தானோ?:பாக்.,கில் "டேமேஜ்" பஜாரானது "ட்ரீம்" பஜார்
இலவசம்-னு அறிவிச்சாலே இப்படித்தானோ?:பாக்.,கில் "டேமேஜ்" பஜாரானது "ட்ரீம்" பஜார்
ADDED : செப் 01, 2024 08:53 PM

இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தான் பிசினஸ்மேன் ஆரம்பித்த ட்ரீம் பஜாரில் இலவசம் அறிவித்ததால் முதல் நாளிலேயே டேமேஜ் பஜரானது.
இலவசம் , தள்ளுபடி -இந்தவார்த்தையை கேட்டாலே மனசுக்குள் ஒரு கிறக்கம் உருவாவது நமக்கு மட்டும்ல்ல உலகம் முழுவதும் இப்படிதான் இருக்கும் போல.இது உண்மை தான் என்பது போன்ற சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர் கராச்சி நகரில் மிகப்பெரிய மால் ஒன்றை கட்டி உள்ளார். இதற்கு ட்ரீம் பஜார் எனவும் பெயிரிட்டு இன்று ( செப்.,01) திறப்பு விழா நடத்தினார்.
திறப்பு விழாவை முன்னிட்டு உள்ளூர் மக்களுக்காக சிறப்பு தள்ளுபடி இலவசம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்திருந்தார். இதனை கேள்விப்பட்ட அந்நாட்டு மக்கள் கடை திறப்பு விழா நடத்தும் நேரத்திற்கு முன்னதாகவே பெரும் கூட்டமாக கூடி காத்திருந்தனர். திறப்பு விழா முடிந்தவுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்கப்பட்டனர். அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் கடைக்குள் புகுந்தனர்.
இந்தநெருக்கடியால் கடை ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். தொடர்ந்து மக்களை சமாளிக்க முடியாமலும் திணறினர். மாலை 3 மணிக்கு திறப்பு விழா நடத்தப்பட்ட கடையில் 3.30 மணிக்குள்ளாக கடை முழுவதும் சூறையாடப்பட்டது. கடையின் கண்ணாடி உடைக்கப்பட்டது. கட்டடம் நாசாமாக்கப்பட்டது.
இதுகுறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், கடை திறப்பு விழா குறித்து அறிவிப்பு தங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படவில்லை எனவும், சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
மக்களின் செய்கையை வீடியோ எடுத்த கடை நிர்வாக ஊழியர்கள் கூறுகையில், மக்களின் செய்கையை பாருங்கள், மக்கள் மாற வேண்டும் என்று கூறி உள்ளனர்.