இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்தது ஈரான் அதிபர் பதவிக்கான தேர்தல்
இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்தது ஈரான் அதிபர் பதவிக்கான தேர்தல்
ADDED : ஜூன் 30, 2024 12:39 AM

டெஹ்ரான்: ஈரான் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டாம் கட்ட தேர்தல் அடுத்த வாரம் நடக்க உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக இருந்த முகமது ரெய்சி, சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அதிபர் பதவிக்கு அங்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின.
இந்த தேர்தலில், சீர்திருத்தங்களுக்கு ஆதரவான மசூத் பெஜகியான்,மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 1.04 கோடி ஓட்டுகளை பெற்றார்.
பழமைவாதியான அணு ஒப்பந்தத்தில் பங்கேற்ற முன்னாள் தலைவர் சயீத் ஜலீலி, 94 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.
பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலஸிபாப், 33 லட்சம் ஓட்டுகளையும், ஷியா மதக் குருவான முஸ்தபா போர்மொகம்மதி, 2.06 லட்சம் ஓட்டுகளும் பெற்றனர்.
ஈரான் நாட்டு சட்டத்தின்படி மொத்த ஓட்டு களில், 50 சதவீதம் பெற்றவர்களே அதிபராக பதவியேற்க முடியும்.
இதனால், இரண்டாம் கட்ட தேர்தல் அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதில், முதல் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் போட்டியிடுவர்.
இதற்கு, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமோனி தலைமையிலான, கார்டியன் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.