ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சதி: பிரபல பாடகி நிகழ்ச்சி ரத்து
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சதி: பிரபல பாடகி நிகழ்ச்சி ரத்து
UPDATED : ஆக 09, 2024 09:22 AM
ADDED : ஆக 09, 2024 12:45 AM

வியன்னா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். ஆஸ்திரியாவின் வியன்னாவில் நேற்று துவங்கி, மூன்று நாட்களுக்கு இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது அதனால், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக, ஆஸ்திரியாவைச் சேர்ந்த 19 மற்றும் 17 வயது இளைஞர்கள் இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்பாக போலீசார் கூறியுள்ளதாவது:
இந்த இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள். டெய்லர் ஸ்விப்ட் நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் பங்கேற்பர் என்பதால், அதில் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
அவர்களுடைய வீடுகளில் இருந்து, ஐ.எஸ்., அமைப்பு தொடர்பான ஆவணங்கள், வெடி பொருட்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.