கமலா ஹாரிஸ் கருப்பினத்தவராகவே மாறிவிட்டார்: டிரம்ப் ஆதங்கம்
கமலா ஹாரிஸ் கருப்பினத்தவராகவே மாறிவிட்டார்: டிரம்ப் ஆதங்கம்
UPDATED : ஆக 03, 2024 08:43 AM
ADDED : ஆக 03, 2024 08:18 AM

வாஷிங்டன்: வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .
இந்நிலையில் சிகாகோ நகரில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்க மாநாட்டில் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், கமலா ஹாரிஸ் மீது இனவெறி கருத்தினை தெரிவித்துள்ளார். டிரம்ப் மேலும் கூறியதாவது, ‛கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை உடையவர். இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார்.
ஆனால் தற்போது அவர் கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். அதனால் கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா என்று தெரியவில்லை. ஆனால் நான் எல்லோரையும் மதிக்கிறேன். கமலா ஹாரிஸ் வெளிப்படைதன்மை உடையவராக இல்லை. இந்தியராக இருந்த அவர் திடீரென்று கருப்பினத்தவராக மாறிவிட்டார். இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். ஆப்பிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான் தான்‛ இவ்வாறு டிரம்ப் பேசினார்.
கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்காவில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு இடையே டிரம்ப் கமலா ஹாரிஸின் புகைப்படம் ஒன்றை பல வருடங்களுக்கு முன் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், ‛ நீங்கள் அனுப்பிய புகைப்படத்திற்கு நன்றி. உங்கள் அரவணைப்பு, இந்திய மக்கள் மீதான அன்பு பாராட்டுக்குரியது'. இவ்வாறு டிரம்ப் அதில் பதிவிட்டிருந்தார்