ADDED : செப் 05, 2024 11:44 PM

விளாடிவோஸ்டாக்: கமலா ஹாரிசின் புன் சிரிப்பே , அவருக்கு எல்லாம் நடந்து விடும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து ரஷ்ய அதிபர் புடின் பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியலிருந்து விலகியதையடுத்து துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள், கமலா ஹாரிசுக்கு சாதமாக வரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
வோலடிவோஸ்டாக்கில் நடந்த கருத்தரங்கில் புடின் பேசியது, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். இது அவர் எடுத்த சரியான முடிவாக நான் கருதுகிறேன்.
கமலா ஹாரிசின் வசீககரமான புன்சிரிப்பே அவருக்கு எல்லாம் நடந்து விடும் என முடிவுக்கு வந்துவிடலாம். ரஷ்யாவிற்கு எதிரான செயல்களை கமலா ஹாரிஸ் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இத்தேர்தலில் யார் அதிபராக வர வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.