தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஸ்பெயினில் தடம் புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதி 39 பேர் பலி

 ஸ்பெயினில் தடம் புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதி 39 பேர் பலி

 ஸ்பெயினில் தடம் புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதி 39 பேர் பலி


ADDED : ஜன 20, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: ஸ்பெயினில், இரண்டு பயணியர் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், 39 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் கொர்டோபா மாகாணத்தில் உள்ள மலாகா நகரிலிருந்து மாட்ரிட் நோக்கி, 'ஐரியோ' என்ற தனியார் நிறுவனத்தின் விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அடமுஸ் நகருக்கு அருகே, இந்த ரயில் தடம் புரண்டது.

இதில், ரயிலின் பின்பகுதி பெட்டிகள், அருகில் உள்ள மற்றொரு ரயில் பாதையில் விழுந்தன. அப்போது, இரண்டாவது ரயில் பாதையில் வந்த, மாட்ரிட் - -ஹுவெல்வா பயணியர் ரயில், ஐரியோ ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இரண்டு ரயில்களிலும் 500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்தனர். விபத்தில் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், பலர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். ஜன்னல்களை உடைத்து வெளியேற முயன்றபோது, பலர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால், இருள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு வீரர்கள், போலீசார், மருத்துவக் குழுக்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் டிரோன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

“நேராகச் செல்லும் ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டது உண்மையிலேயே விசித்திரமானது. இந்தத் தண்டவாளம் மே மாதத்தில் தான் புதுப்பிக்கப்பட்டது,” என்று ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் புவென்டே கூறினார்.

விபத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us