UPDATED : ஜூலை 10, 2024 03:50 AM
ADDED : ஜூலை 10, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியன்னா: ரஷ்யா பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சென்றடைந்தார்.
அங்கு ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார். 40 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என கூறப்படுகிறது.