ADDED : ஆக 23, 2024 09:55 PM

வாஷிங்டன்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உதவிகரமானதாக இருக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அரசு முறைப்பயணமாக மோடி போலாந்து, உக்ரைன்ஆகியநாடுகளுக்கு சென்றுள்ளார். இன்று ( ஆக.,23) உக்ரைன் சென்றடைந்த அவர் , அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவிவ்நகரில் சந்தித்து பேசினார்.
ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்கா தன்கருத்தை தெரிவிததுள்ளது.
இது தொடர்பாக அதிபர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளதாவது,
மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம்இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷ்ய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.