UPDATED : ஆக 08, 2024 08:09 PM
ADDED : ஆக 08, 2024 07:22 PM

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி,ஸ்பெயின் அணியுடன் .உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் 7 ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி மோதியது.
ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 2 கோல் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். . இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 4 வெண்கலம்
இதன் மூலம் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
![]() |
ஸ்ரீஜேஷ் ஒய்வு
இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற ஸ்ரீஜேஷ் இத்துடன் தனது ஒய்வை அறிவித்தார். வெண்கலம் வென்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த ஒலிம்பிக் போட்டியுடன் தாம் ஒய்வு பெறுவதாக கூறினார்.