பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு : முதலிடம் பிடித்து அமெரிக்கா அசத்தல்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு : முதலிடம் பிடித்து அமெரிக்கா அசத்தல்
UPDATED : ஆக 11, 2024 09:32 PM
ADDED : ஆக 11, 2024 09:23 PM

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா.
பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்தது. அமெரிக்காவின் மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் அமெரி்க்கா தங்கம் வென்றது. இதனையடுத்து பதக்க பட்டியிலில் 40 தங்கம் வென்று அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதே அளவிற்கு தங்கம் வென்றுள்ளது சீனா. இருப்பினும் வெள்ளி ,மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற வகையில் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
40 தங்கம் 44 வெள்ளி,42 வெண்கலம் என மொத்தமாக 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
40 தங்கம் 27 வெள்ளி 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை பெற்று சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
20 தங்கம், 12 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு 71 வது இடம்
பதக்கப்பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை பெற்று 71 வது இடத்தை பிடித்துள்ளது.