தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்கா விமானம் மோதி விபத்து நடந்து சென்றவர் பலி

அமெரிக்கா விமானம் மோதி விபத்து நடந்து சென்றவர் பலி

அமெரிக்கா விமானம் மோதி விபத்து நடந்து சென்றவர் பலி


ADDED : மே 10, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டென்வர்: அமெரிக்க விமான நிலையத்தின் ஓடு பாதையில் புறப்பட்ட விமானம் மோதி, நடந்து சென்றவர் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் கொலராடோ தலைநகர் டென்வரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு ‘பிரான்டியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, ஏழு விமான பணியாளர்கள் மற்றும் 224 பயணியருடன் புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து புறப்பட தயாரான போது, பாதசாரி ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக விமானத்தில் புகை வந்ததையடுத்து, விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணியர் அனைவரும் அவசர வழிகள் வாயிலாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மிகுந்த ஓடுதள பகுதிக்குள் அவர் எப்படி நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வளையத்தை மீறி ஓடுதளத்திற்குள் ஒரு நபர் நுழைந்தது விமான நிலைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us