போர்க்களத்துக்கு ஒரு பயணம்; உக்ரைன் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!
போர்க்களத்துக்கு ஒரு பயணம்; உக்ரைன் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!
UPDATED : ஆக 23, 2024 01:04 PM
ADDED : ஆக 23, 2024 11:47 AM

கீவ்: சிறப்பு ரயில் மூலமாக போலந்தில் இருந்து 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு உக்ரைன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.போலந்தில், அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
அங்கு இருந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு சிறப்பு ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் உக்ரைன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடியின் பயணத்தை பல்வேறு நாடுகள் உன்னிப்பாக கவனிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன்- ரஷ்யா போருக்கு முடிவு வந்து, நல்ல காலம் பிறக்குமா? என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.நல்ல காலம்