டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட "அப்டேட்"
டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட "அப்டேட்"
ADDED : செப் 05, 2024 10:23 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது குறித்து, சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,' சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வலிமை
திருச்சி, மதுரையில் optum நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. optum நிறுவனம் ஏற்கெனவே சென்னையில் மருத்துவத்துறையில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.