UPDATED : மார் 08, 2025 10:22 PM
ADDED : மார் 08, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்கா உக்ரைனுக்கான புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் ராணுவ உதவியை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோப்ரோபில்லியா உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் 20 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் உக்ரைனின் பொது மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.