ADDED : பிப் 22, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. வட மத்திய மாகாணத்தில் மின்னேரியா தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகளை காண்பதற்காக, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பூங்காவை ஒட்டியுள்ள ரயில் பாதையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணியர் ரயில் நேற்று முன்தினம் சென்றது. அப்போது, அந்த வழித்தடத்தை திடீரென கடக்க முயன்ற காட்டு யானைகள் கூட்டத்தின் மீது, அந்த ரயில் மோதி தடம்புரண்டது.
இந்த விபத்தில், நான்கு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் பலியாகின. ரயில் பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

