தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சுவிட்சர்லாந்து சுற்றுலா பஸ் கவிழ்ந்து 5 பயணியர் பலி

சுவிட்சர்லாந்து சுற்றுலா பஸ் கவிழ்ந்து 5 பயணியர் பலி

சுவிட்சர்லாந்து சுற்றுலா பஸ் கவிழ்ந்து 5 பயணியர் பலி


UPDATED : செப் 11, 2026 07:39 PM

ADDED : செப் 11, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 07:39 PM ADDED : செப் 11, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெர்ன்:

சுவிட்சர்லாந்து நாட்டில், சுற்றுலா பஸ் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில், 5 பேர் உயிரிழந்தனர், 40 பேர் படுகாயமடைந்தனர்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த 45 பேர், 'ஓட்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா பஸ்சில் சுவிட்சர்லாந்திற்கு சென்றனர். நேற்று முன்தினம் மதியம் கிராபுன்டென் மாகாணத்தில் சுஷ் மற்றும் செர்னெஸ் கிராமங்களுக்கு இடையேயான சாலையில் இந்த பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத் தடுப்புச் சுவரில் வேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பயணியர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us