இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய வைரம்; மதிப்பைக் கேட்டா மலைச்சுப் போயிடுவீங்க!
இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய வைரம்; மதிப்பைக் கேட்டா மலைச்சுப் போயிடுவீங்க!
UPDATED : ஆக 24, 2024 07:07 AM
ADDED : ஆக 24, 2024 07:06 AM

போட்ஸ்வானா: உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் கிடைத்த வைரங்களில் இதுவே மிகப்பெரிய வைரமாகும்.
வைரம்
வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஆப்ரிக்காவைச் சேர்ந்த போட்ஸ்வானா விளங்குகிறது. இங்கு மேற்கு போட்ஸ்வானாவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் கனடாவைச் சேர்ந்த லூகாரா டைமண்ட் கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் வைரத்தை தோண்டும் முயற்சியில் ஈடுபட்டது.
2வது மிகப்பெரிய
அப்போது, சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டது. இது உலகின் 2வது மிகப்பெரிய வைரமாக பார்க்கப்படுகிறது. இதை அந்த நாட்டின் பிரதமர் மோக்வீட்சி மசிசி அறிவித்தார்.
இந்த வைரத்தின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.350 கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நம்பர் 1
இதற்கு முன்பாக, தென்னாப்ரிக்காவில் 1905ம் ஆண்டு 3,106 காரட் கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம், பிரிட்டீஷ் அரசிக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதில் தயார் செய்யப்பட்ட ஆபரணங்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் நகைகளை இப்போதும் அலங்கரிக்கின்றன. மகாராணியின் மணிமுடியிலும் அந்த வைரம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

