ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம்
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம்
UPDATED : மே 19, 2024 10:32 PM
ADDED : மே 19, 2024 06:57 PM

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே வாகன தொடரின்போது ( கான்வாய்) ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெ லிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஈரான் நாட்டின் அரசு அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பனி மூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிபர் பயணித்தஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதிபர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விபரம் கண்டறியப்பட்டு வருகிறது.
ஈரான் அதிபருக்காக பிரார்த்தியுங்கள் சமூகவலைதளத்தில் பதிவு
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்திக்குமாறு அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.மோசமான வானிலையால் விபத்து நேர்ந்த பகுதியை அடைய ஈரான் மீட்புப் படையினர் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தகவல்.

