அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல்; விண்வெளியில் இருந்து எடுத்த படம் வெளியிட்டது நாசா!
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல்; விண்வெளியில் இருந்து எடுத்த படம் வெளியிட்டது நாசா!
UPDATED : செப் 12, 2024 10:53 AM
ADDED : செப் 12, 2024 10:41 AM

நியூயார்க்: அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
கருப்புதினம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பயணிகள் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நடந்த 18 நிமிடங்கள் இடைவெளியில் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது மற்றொரு விமானத்தை மோதச் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட 3 பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
நினைவுதினம்
வல்லரசு நாடான அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இந்த தாக்குதல் தேசப்பாற்றாளர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 23ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடிதம்
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, அமெரிக்காவின் விண்வெளி வீரர் பிராங்க் குல்பர்ட்சன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது, தனது வேதனையை கடிதத்தின் மூலம் எழுதி அனுப்பியுள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 12, எனும் தேதியிட்ட கடிதத்தில், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் குறித்து தனது துக்கத்தை பகிர்ந்துள்ளார்.
போட்டோ
அந்த சமயத்தில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவுடன் கூடிய, இந்தக் கடிதத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில், 'இந்த உலகம் இன்று மாறிவிட்டது. நம் நாட்டிற்கு நடந்ததைப் பார்க்கும் போது, நான் சொல்வதும், செய்வதும், மிகவும் சிறியவைதான். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை நாம் அறிவோம். இந்த தருணத்தில் அமெரிக்கராக விண்வெளியில் இருந்தது எப்படி என்பதை விவரிப்பது மிகவும் கடினமானதாகும்.நான் உங்கள் அனைவருடனும் இருக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, விண்வெளியில் இருந்தபடி, தாக்குதல் சமயத்தில் நியூயார்க்கில் இருந்து வானுயரம் வெளியேறிய கரும்புகையை அவர் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில், இரட்டை கோபுரத்தில் தாக்குதலுக்கான விமானத்தின் பைலட், பிராங்க் குல்பர்ட்சன் நண்பன் சார்லஸ் புர்லிங்காம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

