தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட நடக்குமா; காமெடியில் கவுண்டமணியை மிஞ்சுகிறார் டிரம்ப்!

இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட நடக்குமா; காமெடியில் கவுண்டமணியை மிஞ்சுகிறார் டிரம்ப்!

இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட நடக்குமா; காமெடியில் கவுண்டமணியை மிஞ்சுகிறார் டிரம்ப்!


ADDED : ஆக 18, 2024 11:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 11:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ''கமலா ஹாரிஸை காட்டிலும் நான் தான் அழகாக இருக்கிறேன்,'' என்று, முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், சர்ச்சைகளின் நாயகன் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோற்றுப்போய், தன் ஆதரவாளர்களை விட்டு கலவரம் செய்தது, ஆபாச பட நடிகை வாயடைக்க பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு எழுதியது என அவர் மீதான சர்ச்சைகள் ஏராளம்.

அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 'அவரை எளிதில் வெற்றி கொள்வேன்' என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்'என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

கமலாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப்

இந்நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது: நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன். எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு என்ன ஆனது? நான் அவரை எதிர்த்து களத்தில் இருக்கிறேன். ஆனால் பைடன் விலகிவிட்டார். இப்போது வேறு ஒருவருக்கு எதிராக போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்து வரும் டிரம்ப்பை, கமலா ஓட ஓட விரட்டுவாரா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us