தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ தாக்குதல் நடத்த முற்பட்ட ஈரான் பதிலடி கொடுத்த அமெரிக்கா

தாக்குதல் நடத்த முற்பட்ட ஈரான் பதிலடி கொடுத்த அமெரிக்கா

தாக்குதல் நடத்த முற்பட்ட ஈரான் பதிலடி கொடுத்த அமெரிக்கா


ADDED : மே 05, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெஹ்ரான்: அமெரிக்க போர் கப்பலை தாக்க முயன்ற ஈரானின் ஆறு சிறிய படகுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஆகியவற்றை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், பல நாடுகளின் சரக்கு கப்பல்கள் வெளியேற முடியாமல் காத்திருக்கின்றன.

இந்நிலையில், சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும், ‘புராஜெக்ட் ப்ரீடம்’ என்ற திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஈரான் சிறிய படகுகள் வாயிலாக தாக்குதல் நடத்த முற்பட்டது. மேலும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஈரான் செலுத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்க படையினர் இடைமறித்து அழித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆறு ஈரானிய சிறிய படகுகளும் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us