உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 07, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
மெக்சிகோ சிட்டி, செப். 8–
மெக்சிகோவில் சர்வி திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர பட்டாசு விபத்தில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தெமஸ்கால்சிங்கோ நகரில் நுவெஸ்ட்ரா செனோரா டி லா லுாஸ் என்ற சர்ச் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி இரவு திருவிழா நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொருட்கள் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர்; இரு பாதிரியார்கள் உட்பட, 64 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
