ADDED : அக் 26, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெஷாவர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாராபன் பகுதியில் சோதனைச்சாவடியில் நேற்று ஆயுதங்களை ஏந்திய கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது.
இதில், அங்கு இருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதுடன், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தேடும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு, எந்த பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எனினும், அப்பகுதியில் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அந்த அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.