ADDED : ஏப் 02, 2025 03:28 AM

கோலாலம்பூர்; தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் ஜெயா பகுதியில், அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸின் எரிவாயு கிடங்குகள் அமைந்துள்ளன.
இங்கிருந்து குழாய்கள் வாயிலாக வீடுகளின் சமையலறைக்கு நேரடியாக எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சுபாங் ஜெயா என்ற பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாய் ஒன்றில் நேற்று காலை கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது.
எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில், வான் உயரத்திற்கு மிகப்பெரிய அளவில் தீ பிழம்பு எழுந்தது.
உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வெடிவிபத்து நடந்த குழாய்க்கு வரும் எரிவாயு இணைப்புகளை துண்டித்தனர். இதன் காரணமாக தீ கட்டுக்குள் வந்தது.
வெடி விபத்தால் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் லேசான தீக்காயம் அடைந்தனர்.