தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்கா விசாவுக்காக கொள்ளை நாடகம்; இந்தியர்கள் 11 பேர் கைது

அமெரிக்கா விசாவுக்காக கொள்ளை நாடகம்; இந்தியர்கள் 11 பேர் கைது

அமெரிக்கா விசாவுக்காக கொள்ளை நாடகம்; இந்தியர்கள் 11 பேர் கைது


ADDED : மார் 14, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 11 பேர், கொள்ளை நாடகம் நடத்தி, 'யு - 1' விசா பெற முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

யு - 1 விசா என்பது, அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் குறிப்பிட்ட குற்றத்தால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம், வேலை அனுமதி, பின்னர் கிரீன் கார்டு வழங்கும் வாய்ப்பு அளிப்பதாகும்.

இந்நிலையில், மாசசூசெட்ஸ், கென்டக்கி, ஓஹியோ உட்பட பல்வேறு அமெரிக்க மாகாணங்களில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் இந்த விசாவை மோசடியாக பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படேல் என்ற இந்தியப் பெயரைக் கொண்ட 11 பேரும், சூப்பர் மார்க்கெட், உணவகங்களில் கொள்ளை நடந்து தாங்கள் பாதிக்கப்பட்டதாக போலியாக காட்டி யு - 1 விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விசா மோசடி சதி குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களுக்கு, தலா 5 ஆண்டு சிறையும், இரண்டரை கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us