பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: நேபாளத்தில் பயணிகள் 13 பேர் பலி
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: நேபாளத்தில் பயணிகள் 13 பேர் பலி
UPDATED : பிப் 06, 2026 11:23 PM
ADDED : பிப் 06, 2026 02:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 13 பேர் உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பைதாடி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடிய விடிய மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

