தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சிரியா சிறையிலிருந்து 1,500 பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்

 சிரியா சிறையிலிருந்து 1,500 பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்

 சிரியா சிறையிலிருந்து 1,500 பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்


ADDED : ஜன 21, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டமாஸ்கஸ்: சிரிய ராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய குழுவுக்கு இடையேயான மோதலுக்கு மத்தியில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 1,500 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்காசிய நாடான சிரியாவில், பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், எஸ்.டி.எப்., எனும் சிரிய ஜனநாயக கிளர்ச்சி படை முக்கிய இடம் வகித்து வருகிறது.

இந்நிலையில், சிரிய அரசு படைகளுக்கும், எஸ்.டி.எப்., குழுவுக்கும் இடையே நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இரு தரப்புக்கும் இடையே நேற்றும் மோதல் நடந்தது. இதைப் பயன்படுத்தி, அந்நாட்டின் ஹசாக்கா மாகாணத்தின் ஷடாடி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1,500 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், 120 பேர் மட்டுமே தப்பியுள்ளதாகவும், அவர்களில் 81 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாகவும் சிரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us