பாகிஸ்தானில் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 16 பேர் பலி
பாகிஸ்தானில் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 16 பேர் பலி
ADDED : செப் 18, 2026 04:55 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தின் போலீஸ் லைன்ஸ் பகுதியில் இன்று (செப் 18) மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் மசூதியில் கூடியிருந்த போது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை பயங்கரவாதி மசூதியின் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தினார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மசூதியின் கூரை இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
