ADDED : ஏப் 01, 2025 09:13 PM
ரோம்:இத்தாலியில் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 16 டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் தீயில் எரிந்து சேதமாகின.
ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா கார் ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும், இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 16 டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள், தீயில் முற்றிலும் எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக, அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோர், டெஸ்லா கார் ஷோரூம்கள் மீது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, ரோம் நகரில் உள்ள டெஸ்லா கார் ஷோரூமை, போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனரா என்ற கோணத்திலும் இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக, ஷோரூம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

