ADDED : செப் 27, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு:நேபாளத்தில் நடந்த இளைஞர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு பெரும் கலவரம் வெடித்தது.
பிரதமராக இருந்த சர்மா ஒலி பதவி விலகினார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. சுசீலா கார்கி முதல் முறையாக டிவி வாயிலாக நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார்.
அப்போது நேபாளத்தில் தேர்தலில் ஓட்டளிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக அறிவித்தார்.