கனடாவில் குற்றச்செயல்கள், பணப்பறிப்பில் ஈடுபட்ட இந்தியர்கள் 17 பேர் கைது
கனடாவில் குற்றச்செயல்கள், பணப்பறிப்பில் ஈடுபட்ட இந்தியர்கள் 17 பேர் கைது
ADDED : மே 26, 2026 07:16 PM

ஒட்டாவா : கனடாவில் உள்ள தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை குறி வைத்து பணப்பறிப்பு மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த உணவகங்கள், லாரி போக்குவரத்து நிறுவன உரிமையாளர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி, அவர்களிடம் பெரும் தொகையை பறிக்கும் குற்றச் செயல்கள் நடந்து வந்தன. இதை தடுக்க அமைக்கப்பட்ட பீல் போலீசாரின் 'பணப்பறிப்பு தடுப்பு பணிக்குழு' சமீபத்தில் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 'பார் பிரதர்ஸ்' என்ற சர்வதேச குற்றவியல் கும்பலுடன் தொடர்புடையோர் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த 17 பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து, ஆறு துப்பாக்கிகள், போதைப்பொருட்கள், பல செல்போன்கள், போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
