நோயாளிகள் 17 பேர் கொலை; அமெரிக்க நர்ஸ்க்கு 700 ஆண்டு சிறை!
நோயாளிகள் 17 பேர் கொலை; அமெரிக்க நர்ஸ்க்கு 700 ஆண்டு சிறை!
ADDED : மே 04, 2024 03:02 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டும் என்று, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் 41 வயதான ஹீதர் பிரஸ்வ் என்பவர் நர்ஸ் ஆக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றிய, இவர் 17 நோயாளிகளை கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. 29 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். இதனால் 17 நோயாளிகள் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹீதர் பிரஸ்வ் 3 கொலை வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து, நோயாளிகளுக்கு வேண்டும் என்று, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.