sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 17 கப்பல்கள், 2,000 இலக்குகள் அழிந்தன அமெரிக்க ராணுவம் அறிக்கை

/

 17 கப்பல்கள், 2,000 இலக்குகள் அழிந்தன அமெரிக்க ராணுவம் அறிக்கை

 17 கப்பல்கள், 2,000 இலக்குகள் அழிந்தன அமெரிக்க ராணுவம் அறிக்கை

 17 கப்பல்கள், 2,000 இலக்குகள் அழிந்தன அமெரிக்க ராணுவம் அறிக்கை


ADDED : மார் 05, 2026 03:46 AM

Google News

ADDED : மார் 05, 2026 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: ஈரான் மீதான தாக்குதல்களில் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அறிவித்துஉள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கையான 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' ஐந்தாம் நாளான நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் வீடியோ மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த தாக்குதல் தொடங்கிய முதல் 100 மணி நேரத்திலேயே, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ஏவு தளங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டோம்.

அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு, ஈரானின் முழு கடற்படையையும் மூழ்கடித்து வருகிறது.

இதுவரை, 17 ஈரானிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஈரானின் மிக முக்கியமான மற்றும் செயல்பாட்டில் இருந்த நீர்மூழ்கி கப்பலும் அடங்கும்.

தொடர்ந்து 24 மணி நேரமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறோம்.

நுாற்றுக்கணக்கான போர் விமானங்கள், 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், இரண்டு விமானம் ஏந்திய கப்பல்கள் , கனரக குண்டுவீசும் விமானங்கள் உள்ளிட்ட பெரும் படைப்பலம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us