சிலியில் காட்டுத்தீக்கு 18 பேர் பலி: அவசரநிலை அறிவிப்பு
சிலியில் காட்டுத்தீக்கு 18 பேர் பலி: அவசரநிலை அறிவிப்பு
ADDED : ஜன 20, 2026 06:48 AM

சாண்டியாகோ: சிலியில் இரண்டு மாகாணங்களில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி, 18 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான சிலியில் அதிக வெப்பம் காரணமாக, 24 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. குறிப்பாக நுபிள், பியோ பியோ மாகாணங்களில் நேற்று முன்தினம் மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ பற்றியது.
அங்கு 49,000 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி ஏராளமான மரங்கள் கருகின; 250 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த தீயில் சிக்கி, 18 பேர் பலியாகி உள்ளனர். பல உடல்கள் வீடுகள், வாகனங்கள், வயல்களில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
இதையடுத்து நுபிள், பியோ பியோ மாகாணங் களில் அவசரநிலையை அதிபர் கேப்ரியல் பிரகடனப் படுத்தினார். இரண்டு மாகாணங்களிலும் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள னர்.
அண்மையில், சிலியில் சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. இந்நிலையில், பலத்த காற்றும் வீசியதால் வறண்ட காடுகளில் தீப்பற்றி எரியத் துவங்கியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
