ADDED : அக் 11, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்:அமெரிக்காவில், ராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் பக்ஸ்நோர்ட் பகுதியில், 'அக்யூரேட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ்' என்ற ராணுவ ஆயுதத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்திற்காக வெடிபொருட்கள், கண்ணி வெடிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்து சோதனை செய்யப்படுகிறது.
மலை உச்சியில் இருக்கும் இந்த தொழிற்சாலை, எட்டு கட்டடங்களைக் கொண்ட வளாகமாகும். அங்கு நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் ஏராளமான பொருட்கள் சிதறி சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகள் மீதும் விழுந்தன. இந்த விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, இடிந்த தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.