தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு


ADDED : பிப் 13, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எகிப்து நாட்டில் பிரமிடுகளில் உள்ள மன்னர்களின் கல்லறைகளில், 2000 ஆண்டுகள் பழமையான, தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள், கடல் கடந்து வணிகம் செய்தது உறுதியாகி உள்ளது.

எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடுகளில் உள்ள மன்னர்களின் கல்லறைகளில், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில், தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளது.

கல்வெட்டுகளில் 'சிகை கொற்றன்' என்ற பெயர், 5 பிரமிடுகளில், 8 இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு கல்வெட்டில், 'சிகை கொற்றன் வர கண்ட' என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள். 'சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தார்' என்பதாகும்.

இதன் மூலம், தமிழ் வணிகர், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கடல் கடந்து எகிப்து சென்று வணிகம் செய்தது உறுதியாகி உள்ளது. மேலும், ரோமர்கள் காலத்தில், இந்தியா மற்றும் எகிப்து இடையே, வலுவான வர்த்தக உறவுகள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்-பிராமி கல்வெட்டுகள், வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழங்கால தமிழ் வர்த்தகர்கள், உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதற்கு, இக்கண்டுபிடிப்பு மேலும் வலுசேர்த்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us