sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கென்யா திடீர் வெள்ளத்தில் 23 பேர் பேர் பலி

/

 கென்யா திடீர் வெள்ளத்தில் 23 பேர் பேர் பலி

 கென்யா திடீர் வெள்ளத்தில் 23 பேர் பேர் பலி

 கென்யா திடீர் வெள்ளத்தில் 23 பேர் பேர் பலி


ADDED : மார் 08, 2026 06:16 AM

Google News

ADDED : மார் 08, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 23 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில், நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமான வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

இதனால், மக்கள் கார்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 23 பேர் பலியாகினர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட, 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ராணுவம் அவசரமாக களமிறக்கப்பட்டுள்ளது. கென்யா ரெட் கிராஸ் அமைப்பினருடன் இணைந்து அவர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us