தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ 'இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி ரத்தாகலாம்'

 'இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி ரத்தாகலாம்'

 'இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி ரத்தாகலாம்'


ADDED : ஜன 25, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாவோஸ்: இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்டார்.

இதில் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இது தவிர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அபராதமாக கூடுதலாக 25 சதவீதம் வரி கடந்தாண்டு ஆகஸ்டில் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்தது. இதனால் இந்திய வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், ''அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது.

''இதனால், கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளது. இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரும் வெற்றி,'' என, கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்ய அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தார்.

அதே சமயம், மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவின் முன்னுரிமை என்றும், 500 சதவீத வரி விதித்தாலும் இந்தியா தன் எரிசக்தி கொள்கையில் உறுதியாக இருக்கும் எனவும் நம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us