UPDATED : ஆக 22, 2025 11:23 AM
ADDED : ஆக 22, 2025 12:31 AM
பிரேசிலியா:சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான என்.டி.சி., எனப்படும் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு அறிக்கையை, 29 நாடுகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளன. இந்த அறிக்கையை, செப்., 25ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி, 166 நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நினைவூட்டல் கடிதத்தை பிரேசில் அனுப்பியுள்ளது.
வரும் செப்டம்பரில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பொது சபை கூட்டம் துவங்க உள்ளது.
அதில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கும் கூட்டத்தை பிரேசில் நடத்த உள்ளது. அதனால், அதற்கு முன்பாக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, கடிதத்தில் பிரேசில் கூறியுள்ளது.
குறிப்பாக அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்தும் சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.