sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்

/

ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்

ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்

ஈரான் தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்

5


ADDED : மார் 03, 2026 08:59 AM

Google News

ADDED : மார் 03, 2026 08:59 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஓமன் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் இந்தியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; மேற்கு ஆசியா முழுவதும் 20 பேர் காயமடைந்தனர்.

தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

இஸ்ரேல் - ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர். வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியிருந்த நிலையில், துபாயில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை சவூதி அரேபியா வழியாக மீட்டு சென்னைக்கு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை வந்த அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

மகிழ்ச்சி

''துபாயில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது; ஒவ்வொரு மணி நேரமும் வெடி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது; ஆனால் அனைத்து தாக்குதல்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. வீடு மேல ஏவுகணைகள் பறந்துட்டே இருந்துச்சு. எங்களை ரொம்ப பத்திரமாக பார்த்துகிட்டார்கள். பிப்ரவரி 28ம் தேதியே துபாய் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டோம்.

முதலில் விமானம் 2 மணி நேரம் லேட்னு சொன்னாங்க. அப்புறம் திடீரென மொத்தமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. கிளம்புற நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அரசு சார்பாக யாரும் ரிஸ்க் எடுக்காதீங்கனு ஹோட்டலில் தங்க வைத்தனர்'' என துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் தெரிவித்தனர். இஸ்ரேல்- ஈரான் போருக்கு நடுவே மேற்கு ஆசிய நாடுகளுக்கு குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us