sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

/

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

6


UPDATED : ஜன 22, 2026 02:39 PM

ADDED : ஜன 22, 2026 02:28 PM

Google News

UPDATED : ஜன 22, 2026 02:39 PM ADDED : ஜன 22, 2026 02:28 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது; நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் கார்ஜெலிகோவில் இருந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்குழுவிற்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, போலீசாருடன் அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு மர்ம நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இத தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 14ம் தேதி சிட்னி அருகே உள்ள பாண்டை கடற்கரையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் மற்றும் அவரது மகன் சஜித் அக்ரம் ஆகியோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கப்பட்டது. உரிமத்துடன் பொதுமக்கள் வாங்கிய துப்பாக்கிகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்திருந்தது.

இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us